அதிக விலைக்கு முட்டை விற்பனை -அநுராதபுரத்தில் மக்கள் கடும் எதிர்ப்பு
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அநுராதபுரத்தில் இன்று (10) 53 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்த போது மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
குறைந்த விலையில் முட்டைகள் கிடைத்த போதிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொழும்பில் குறைவடைந்த விலை
இதேவேளை, கொழும்பில் பல இடங்களில் 60 ரூபா தொடக்கம் 70 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகள் இன்று 55 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
20 சர்வதேச விநியோகஸ்தர்கள் முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக கேள்வி கோரலை சமர்ப்பித்துள்ளதுடன் அவர்களில் 90 வீதமானவர்கள் இந்திய பிரஜைகள் என அரச வர்த்தக இதர சட்ட கூட்டுத்தாபனம் நேற்று (09) தெரிவித்துள்ளது.
முட்டைகளை இறக்குமதி செய்தால், நாடு தழுவிய ரீதியில் போராட்டம்
எவ்வாறாயினும், இன்று காலை குருநாகலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய கோழிப்பண்ணையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு, முட்டைகளை இறக்குமதி செய்தால், நாடு தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கோழிப்பண்ணையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ கருணாசேகர, இது தொடர்பாக தெரிவிக்கையில்,
“உற்பத்திச் செலவு குறைந்தால் இரண்டு வாரத்தில் குறைந்த விலையில் முட்டை விற்பனையைத் தொடங்கலாம்.எனவே டொலர்களைக் கொண்டு உணவுப் பொருட்களை விரைவில் இறக்குமதி செய்யவும்.முடிந்தால் விவசாயிக்கு விநியோகிக்கவும். நியாயமான விலையில், அரசும் மானியம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
