முட்டை விற்பனை தொடர்பில் வெளியான தகவல்
Food Shortages
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் முட்டையை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருவதால் தற்போது முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில கடைகளில் முட்டை விலை, 55 ரூபாய் முதல், 57 ரூபாய் வரையிலும், சில கடைகளில், 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
முட்டையின் மொத்த விற்பனை விலை
முட்டையின் மொத்த விற்பனை விலை 52 ரூபாய் முதல் 54 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், இந்த நிபந்தனைகளால் கட்டுப்பாட்டு விலையில் முட்டை வழங்க முடியாததால், முட்டை விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முட்டை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நத்தார் பண்டிகைக்குள் தட்டுப்பாடு
இந்நிலைமைகளால் நத்தார் பண்டிகைக்குள் முட்டை தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி