அத்தியவாசியப் பொருட்களின் விற்பனை விலை குறித்து முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Champika Ranawaka Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Jan 03, 2025 05:12 AM GMT
Report

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

நாட்டில் 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின் போது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசேட பண்டவரி கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைகின்ற நிலையில் குறித்த வரிகளைத் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையிலே கொழும்பில் (Colombo) நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போது பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிஐடியில் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய யோஷித ராஜபக்ச

சிஐடியில் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய யோஷித ராஜபக்ச

சதொச ஊடாக விற்பனை

அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. 100 ரூபா வரி அடங்கலாக 616 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் சதொச ஊடாக 845 ரூபாவிற்கு விற்கப்படுகிறது.

அத்தியவாசியப் பொருட்களின் விற்பனை விலை குறித்து முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு | Selling Prices Of Essential Commodities Former Mp

எனவே, இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன், 616 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய காய்ந்த மிளகாயை நீங்கள் எவ்வளவு தொகைக்குக் கொள்வனவு செய்கிறீர்கள் என்பது தொடர்பில் பொது மக்கள் சிந்திக்க வேண்டும்.

513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நெத்தலி 100 ரூபா வரி அடங்கலாக 621 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், நெத்தலி கிலோ கிராம் ஒன்று 960 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்ச்சையை கிளப்பிய யாழ். ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - அரச அதிகாரி காவல்துறையில் முறைப்பாடு

சர்ச்சையை கிளப்பிய யாழ். ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - அரச அதிகாரி காவல்துறையில் முறைப்பாடு

ஆட்சி செய்ய முடியாத நிலை

146 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 211 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். பருப்பு 227 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கான வரி 25 சதம். ஆனால் என்ன நடக்கிறது. இவை அனைத்துக்குமான விலைப்பட்டியலில் தவறு காணப்படுகிறது.

அத்தியவாசியப் பொருட்களின் விற்பனை விலை குறித்து முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு | Selling Prices Of Essential Commodities Former Mp

ஆகவே, அரசாங்கத்தினால் இந்த நிலைமையினை நிவர்த்தி செய்ய முடியாவிடின், நாட்டை ஆட்சி செய்ய முடியாத நிலைமை ஏற்படும்” என  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிறீதரனை இடைநிறுத்த திரைமறைவில் நடக்கும் டீல்

சிறீதரனை இடைநிறுத்த திரைமறைவில் நடக்கும் டீல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024