நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்ற செல்வச்சந்நிதி சூரசம்ஹாரம்
வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் (Selva sannidhi Murugan) கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசம்ஹாரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.
சூரசம்ஹாரம் நேற்று (8.11.2024) வியாழக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாணத்தின் (Jaffna) பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை நூற்றுக்கணக்கான உபவாச விரதகாரர்கள் ஆலயத்தில் தங்கி இருந்து நாளைய தினம் பாறனை விரதம் முடித்து வீடு செல்லவுள்ளனர்.
இதைவேளை வல்வெட்டித்துறை நகரசபை வாகனங்களுக்கான உள் நுழைவு கட்டணம் அறவிட்ட போதும் வாகனங்கள் தரிப்பதற்க்கு உரிய வசதிகள் மேற்கொள்ளப்படாமையால் வாகனங்கள் பல மணிநேரம் நெரிசலில் காணப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |