இனத்தைக் காட்டி கொடுப்பவர்கள் குருந்தூர்மலை பற்றிக் கதைக்க அருகதையற்றவர்கள் - கஜேந்திரன்

By Vanan Aug 17, 2023 04:07 PM GMT
Report

இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்களாக, இனத்தைக் காட்டி கொடுப்பவர்களாக செயல்படுகின்றார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இன்று நாகவிகாரையில் இடம்பெற்ற ரகசிய சந்திப்பில் குருந்தூர் மலையில் சிவன் கோவில் மற்றுமொரு புத்த விகாரை கட்டுவது என்ற தீர்மானத்தை இந்து – பௌத்த மதத்தலைவர்கள் இணைந்து எடுத்துள்ளதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் இன்று மாலை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூலிக்கு மாரடிப்பவர்கள்

இனத்தைக் காட்டி கொடுப்பவர்கள் குருந்தூர்மலை பற்றிக் கதைக்க அருகதையற்றவர்கள் - கஜேந்திரன் | Selvaraja Gajendran Press Jaffna

அவர் மேலும் தெரிவிக்கையில், “சச்சிதானந்தத்தோடு சில இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்களாக உள்ளனர், அவர்கள் குருந்தூர்மலை பற்றி கதைக்க அருகதையற்றவர்கள்.

நாளைய தினம் குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலயத்திலே பொங்கல் வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இந் நிகழ்விலே தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள். எனவே அதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் செயற்படுகின்றனர்.

இந்தியாவின் உளவுத்துறையினுடைய தூதுவராக இருக்கக்கூடிய சிவசேனையினுடைய இலங்கை பிரதிநிதியான சச்சிதானந்தம் குருந்தூர்மலை ஆலயம் தொடர்பில் கருத்து சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை. அவர் இந்தச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்க வேண்டும்.

இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலே மதரீதியாக முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட ரீதியிலே மதவெறி கருத்துக்களை சிவசேனை பரப்பிவருகின்றது.

நேரடி அச்சுறுத்தல்

இனத்தைக் காட்டி கொடுப்பவர்கள் குருந்தூர்மலை பற்றிக் கதைக்க அருகதையற்றவர்கள் - கஜேந்திரன் | Selvaraja Gajendran Press Jaffna

தமிழருடைய இருப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தலாக இருக்கின்ற திட்டமிட்ட பௌத்தமயமாக்களுக்கு முழுமையாக துணைபோகும் விதமாக சச்சிதானந்தத்தின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

அங்கு அவரோடு சென்றிருந்த சில இந்து சமயத்தை சார்ந்தவர்களும் கூலிக்கு மாரடிப்பவர்களாக, இனத்தை காட்டி கொடுப்பவர்களாக செயல்படுகின்றார்கள்.

அவர்களும் இந்தச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவேண்டும்.  உரிமைக்காக போராடிய மக்கள் குருந்தூர்மலையை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்.

பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஆரியகுளம் விகாராதிபதி துணை போகக்கூடாது. அவரோடு தமிழ் மக்கள் நல்லுறவோடு வாழ விரும்புகிறார்கள்.

அவர் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு விகாராதிபதிகளை அழைத்து கூட்டம் நடத்துவது என்பது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.

எனவே ஆக்கிரமிப்பு விகாராதிபதிகளோடு சேர்ந்து ஆரியகுளம் விகாராதிபதி செயற்பட வேண்டாம் என்பதனை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முகவர்

இனத்தைக் காட்டி கொடுப்பவர்கள் குருந்தூர்மலை பற்றிக் கதைக்க அருகதையற்றவர்கள் - கஜேந்திரன் | Selvaraja Gajendran Press Jaffna

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான முகவராக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என அவர் இதன்போது செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாகாண ஆலோசனை குழு மற்றும் அதிகார பரவலாக்கல் குழு ஆகியன ஊடாக தமிழ் மக்களை ஏமாற்றி, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் ஏமாற்று நாடகம் இது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025