தமிழர் தொலைத்த நெடுங்கால வரலாறு
தமிழர்களின் மிக நீண்ட வரலாற்றுக் காலத்தில் தமிழர்களுக்கே தனித்துவமான உரித்துடையது எனச்சொல்லக்கூடிய ஏராளமான பண்பாட்டு பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் பேணப்பட்டு வந்திருக்கின்றன.
அந்த வழியில் தமிழர்களின் இசை மரபு என்று சொல்லப்படுவதும் அதற்காக பயன்படுத்திய இசைக்கருவிகளும் கூட உயர் தனித்துவமுடையாகவே நீண்டகாலமாக இருந்து வந்துருக்கிறன. அவற்றில் மிக அற்புதமான ஒரு இசைப் பயன்பாட்டுக் கருவிதான் சேமக்கலம். இது தமிழர் வாழ்வியலோடு ஒன்றிப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
சேமக்கலம்
சேமக்கலம் ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் ஆலய வழிபாடுகளிலும் கூட முக்கியமான இடத்தை பெறுவதை வடக்கு கிழக்கில் உள்ள இந்து ஆலய மகோற்சவங்களில் சுவாமி உள்வீதி வலம்வருகின்ற போது இசைக்கப்படுவதனை அவதானிக்கலாம்.
அது போவே மரணச்சடங்குகளிலும் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாக இருக்கும். வாழ்வியலோடும் வழிபாடுகளோடும் ஒன்றித்த குறித்த வகை இசைக்கருவிகள் கால ஓட்டத்தில் புழக்கத்திலிருந்து வழக்கொழிந்து போய்க்கொண்டிக்கின்றமை கவலைக்குரியதே.
நீண்ட தமிழர் வரலாற்றில் நெடுங்காலமாக பயன்பாட்டிலிருந்த சேமக்கலங்கள் செயலிழக்கப்படுகின்றமை குறித்து தமிழர்கள் என மார்தட்டிக்கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்வதே சிறப்பாகும்.
காலங்காலமாக நமது முன்னோர்கள் கைக்கொண்ட பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் கட்டிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட,