யாழ்ப்பாணத்தில் 'செஞ்சோலை படுகொலை' நினைவேந்தலை கடைப்பிடிக்க முற்பட்ட வேளை குழப்பம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் 16ஆவது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை கடைப்பிடிக்க முற்பட்ட வேளையில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
உடுவில் ஆலடி முகாம் பகுதியில் 16ஆவது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை கடைப்பிடிக்க இன்று மாலை 4 மணியளவில் செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டு அங்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் சென்றிருந்தனர்.
குழப்ப நிலை
அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் உலருணவு பொருட்களும் வழங்கப்பட்டது.
இதன்போது அங்கு கூடிய அப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலர் தமக்கு இது பற்றி அறிவிக்கவில்லை என்றுகூறி அங்கு குழப்பத்தில் ஈடுபட்டதுடன் ஊடகவியலாளர்களை செய்தி சேகரிக்கவும் அனுமதிக்கவில்லை.
அத்துடன் அப்பகுதியில் புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டத்தையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இதனையடுத்து அங்கு ஏற்பட்ட குழப்பம் வாய்த்தர்க்கமாக மாறவே, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட கட்சி உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
காவல்துறை புலனாய்வு பிரிவினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் திட்டமிட்ட செயலே செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் குழப்பத்திற்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அங்கு கருத்து தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூறப்பட்ட செஞ்சோலை படுகொலை |
யாழ்.பல்கலையில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 16ம் ஆண்டு நினைவு தினம் (காணொளி) |
