செங்குருதி ஓடி செந்தணலாகிய செஞ்சோலை படுகொலை

Sri Lanka Army Sri Lankan Tamils Mullaitivu Sri Lankan Peoples
By Kiruththikan Aug 14, 2022 08:40 AM GMT
Kiruththikan

Kiruththikan

in கட்டுரை
Report

செஞ்சோலை

ஈழத்தமிழரின் வரலாற்றில் என்றைக்கும் மாறாத வடுவாக துயராமாக செஞ்சோலை படுகொலை கண்ணீரால் எழுதப்பட்டிருக்கிறது. அந்த இனப்படுகொலை நிகழ்ந்து இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

தமிழரின் நீண்ட சோக வரலாற்று பக்கங்களில் தடித்த எழுத்துக்களால் எழுதப்பட்ட செஞ்சோலை படுகொலை என்பது சிங்கள பேரினவாதம் எவ்வளவு கொடிய இனப்படுகொலையாளர்கள் என்பதற்கு சான்றாகின்றது.

இதே போன்றதொரு நாளில் (ஆகஸ்ட் 14ஆம் திகதி) காலை 7மணிக்கு சிங்கள இனவெறி அரசின் யுத்த விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 16 குண்டுகளை தொடர்ச்சியாக போட்டு தன் கோர முகத்தை காண்பித்திருந்தது.

இந்த தாக்குதலில் 61 சிறுமிகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டனர். 155 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் பலபேருக்கு உடலுறுப்புகளும் இல்லாமல் போனது. 

பலியாகிய பைந்தமிழ் செல்வங்கள்

செங்குருதி ஓடி செந்தணலாகிய செஞ்சோலை படுகொலை | 16Th Anniversary Of Sencholai Massacre

2006 ஆகஸ்ட் 14ஆம் நாள் காலை 7 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் உள்ள ’செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தில் சிறுமிகளுக்கான தலைமைதிறன்,ஆண் பெண் சமத்துவம்,முதலுதவி உள்ளிட்டவைகள் குறித்து வருடம் தோறும் நடக்கும் 10 நாள் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் ஈழத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 500க்கும் அதிகமான சிறுமிகள் கலந்துகொண்டனர்.

இதை தெரிந்து கொண்டே சிங்கள அரசு அச் சிறுவர்கள் மீது தனது இனவெறியை காண்பித்தது, அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.

ராஜபக்ச தலைமையிலான அரசு செஞ்சோலை இல்லத்தில் சிறுவர் போராளிகள் பயிற்சி இடம் பெற்றதாக கட்டுக்கதை கட்டி மேற்குலக நாடுகள் மத்தியில் தன்னை நிரூபிக்க முயற்சித்தது.

இருப்பினும், மருத்துவமனைகள், பாடசாலைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட கூடாது என்பது சர்வதேச விதியாக இருப்பதால் இவர்களின் கட்டுக்கதை திட்டம் தவிடுபொடியானது.

"அரசுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்கள் வயது வித்தியாசம் பாலினம் பார்க்காமல் கொல்வோமென்று" அப்போதைய சிங்கள இராணுவ செய்தி தொடர்பாளார் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதன் மூலம் இறந்தவர்கள் பொது மக்கள் அல்லாது போராளிகள் என நம்ப வைக்க ராஜபக்ச அரசு முயற்சித்தது.

நேரடி விசாரணையில் ஈடுபட்ட போர் நிறுத்த குழு மற்றும் யூனிசெப்

செங்குருதி ஓடி செந்தணலாகிய செஞ்சோலை படுகொலை | 16Th Anniversary Of Sencholai Massacre

ஆனால், போர் நிறுத்த குழு மற்றும் யூனிசெப் போன்ற அங்கீரிக்கப்பட்ட அமைப்புகள் நேரடியாக களத்தில் சென்று விசாரித்து இவர்கள் குழந்தை போராளிகள் இல்லை என்றும், அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்றும் உலகிற்கு அறிவித்து.

இது மட்டுமல்லாது, செஞ்சோலை என்பது ஐ.நா அமைப்பினால் பயிற்சி பட்டறை நடக்கும் இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்ட இடம் ஆகவே தாக்குதல் தெரியாமலோ தவறுதலாகவோ நடந்தது இல்லையென்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இதன் மூலம் சிங்கள அரசின் முகத்திரை கிழிக்கப்பட்டு தமிழருக்கெதிரான அநீதி அம்பலப்படுத்தப்பட்டது. இருப்பினும் இன்று வரை சிறிலங்கா ராஜபக்ச அரசுக்கெதிரான போர் குற்றம் ஐ.நா மற்றும் உலக நாடுகளால் கண்டும் காணாமல் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டுகள் 16 ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.

எனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகளின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

செஞ்சோலை வளாக குண்டுவீச்சில் உயிரிழந்த மாணவிகளின் விபரம்

01. முத்தையா இந்திரா

02. முருகையா அருட்செல்வி

03. சிவமூர்த்தி கார்த்திகா

04. சந்தனம் சத்தியகலா

05. கனகலிங்கம் நிருபா

06. கனகலிங்கம் நிருஷா

07. நவரட்ணம் சாந்தகுமாரி

08. நாகலிங்கம் கோகிலா

09. சண்முகராசா கவேந்தினி

10. பாலகிருஸ்ணன் மதினி

11. சிவமயஜெயம் கோகிலா

12. விவேகானந்தம் தட்சாயினி

13. சாந்தகுமார் சுகிர்தா

14. உதயகுமாரன் கௌசிகா

15. நல்லபிள்ளை நிந்துஜா

16. வீரசிங்கம் றாஜிதா

17. தம்பிராசா லக்சியா

18. மகாலிங்கம் வென்சிடியூலா

19. துரைசிங்கம் துதர்சினி

20. குபேந்திரச்செல்வம் லிகிதா

21. வரதராஜா மங்களேஸ்வரி

22. இராசேந்திரச்செல்வம் மகிழ்வதனி

23. நீலாயினார் நிவாகினி

24. தமிழ்வாசன் நிவேதிகா

25. சுந்தரம் அனோஜா

26. புவனசேகரம் புவனேஸ்வரி

27. தேவராசா சர்மினி

28. சிவானந்தராசா திவ்வியா

29. தம்பிமுத்து தயாழினி

30. தம்பிராசா சுகந்தினி

31. சிவசுப்பிரமணியம் வட்சலாமேரி

32. தனபாலசிங்கம் பகீறஜி

33. தணிகாசலம் தனுசா

34. பத்மநாதன் கலைப்பிரியா

35. மார்க்குப்பிள்ளை கெலன் சுதாயினி

36. இராசமோகன் கம்சனா

37. மகாலிங்கம் வசந்தராணி

38. கிரிதரன் டயானி

39.துரைசிங்கம் திசானி

40. வைரமுத்து கிருத்திகா

41. சந்திரமோகன் நிவேதிகா

42. நாகலிங்கம் தீபா

43. தம்பிராசா தீபா

44. திருநாவுக்கரசு நிரஞ்சுலா

45. இரவீந்திரராசா றம்ஜா

46. கணபதிப்பிள்ளை நந்தினி

47. விஜயபவன் சிந்துகா

48. நகுலேஸ்வரன் நிஷாந்தினி

49. தர்மகுலசிங்கம் கேமாலா

50. அருளம்பலம் யசோதினி

51. செல்வம் நிறோஜினி

குண்டுவீச்சில் உயிரிழந்த செஞ்சோலை பணியாளர்களது விபரம்

01. சந்திரசேகரன் விஜயகுமாரி

02. சொலமொன் சிங்கராசா

குண்டுவீச்சில் காயமடைந்த மாணவிகளின் விபரம்

01. நாகலிங்கம் உசாந்தினி

02. சதாசிவம் பிரியதர்சினி

03. ரவீந்திரன் பிரியதர்சினி

04. ஆறுமுகம் தயாளினி

05. குலேந்திரன் சுயித்தா

06. நடராசா சிறிவித்தியா

07. சி.மதுசா

08. குணநாதன் ஜசிதேவி

09. சிவனேஸ்வரன் நகுலேஸ்வரி

10. முருகேசு இந்திரவதனா

11. குகனேந்திரன் அஜித்தா

12. வெள்ளிரூபன் துசாந்தினி

13. சுந்தரம்பிள்ளை கஜேந்தினி

14. செல்வானந்தன் ஜான்சி

15. நிர்மலகுமார் நிசாந்தி

16. நடராசா கிந்துஜா

17. மகேந்திரம் சர்மிளா

18. சண்முகராசா தனுசா

19. வெற்றிவேல் சுதர்சினி

20. ரவிதாசன் சிந்துஜா

21. சூரியகுமார் சியாமினி

22. பூபாலசிங்கம் விஜிந்தா

23. முருகன் கௌசி

24. ஞானசேகரம் நிரூஜா

25. மகாலிஙக் ம் கோபிகா

26. புலேந்திரராசா சுதர்சினி

27. நடராசாலிங்கம் கவிதா

28. செல்வநாயகம் அமுதாசினி

29. மகேந்திரராசா நிரூசா

30. கதிரேசன் பிரமிளா

31. புஸ்பவதி

32. ஆறுமுகநாதன் மேகலா

33. கணேசலிங்கம் கோகிலா

34. விஜயசிங்கம் நிதர்சினி

35. றொபேட் யோகராசா துஸ்யந்தி

36. செல்வரத்தினம் சர்மிளா

37. சிவலிங்கம் கமலரூபினி

38. மாணிக்கராசா தயாவிழி

39. சிறிஸ்குமார் வித்தியா

40. இராஜேந்திரம் மீனலோஜினி

41. தங்கவேல் கலைச்செல்வி

42. ஜீவரட்ணம் கிருபாஜினி

43. கலைச்செல்வன் கேமா

44. சின்னராசா சுஜீவா

45. மாணிக்கராசா தயாவிழி

46. மாணிக்கம் கோமதி

47. யோகராசா ரேகாந்தினி

48. பாலசிங்கம் ஜானிகா

49. கந்தசாமி சோபிகா

50. அந்தோனிப்பிள்ளை விஜிதா

51. மாணிக்கம் மேனகா

52. கிட்ணன் சுலோஜினி

53. ஜெயக்கொடி சங்கீதா

54. இரத்தினசிங்கம் மேகலா

55. ஆனந்தராசா மேரிபவிதா

56. கணேசன் ரூபவதனி

57. ஆனந்தராசா டயாணி

58. கணபதிப்பிள்ளை சுஜிவா

59. மகாலிங்கம் யாழினி

60. அரசகுலசிங்கம் லக்சனா

61. நாகராசா தனுசா

62. கணேஸ் ராதிகா

63. திருநாவுக்கரசு நிரஞ்சினி

64. சண்முகலிங்கம் ஜெசினா

65. துரைரத்தினம் சுபத்திரா

66. புஸ்பானந்தி மயில்வாகனம்

67. யாழினி மகாலிங்கம்

68. சிவானந்தம் சிந்துஜா

69. யோகராசா சாளினி

70. உதயகுமார் பிரியா

71. சிவானுப்பிள்ளை சுகந்தினி

72. சபாரட்ணம் சௌமியா

73. நவரத்தினசிங்கம் அனுசியா

74. வேலுப்பிள்ளை தர்சனா

75. பேணாட் பிரபாலினி

76. ஆறுமுகம் உமாமகேஸ்வரி

77. வையாபுரி யுகனாதேவி

78. பொன்னையா துஸ்யந்தி

79. யோகலிங்கம் வேஜினியா

80. யோகராசா பிரபாஜினி

81. இராசேந்திரம் அருள்நாயகதீபா

82. அசோக்சந்திரன் ஜனனி

83. வாமதேவா ஜனனி

84. செல்வராசா சுஜிதா

85. ஆனந்தராசா ரஞ்சிதா

86. சிவராசா சயந்தா

87. கணேசலிங்கம் இந்துஜா

88. தெய்வேந்திரம்பிள்ளை வித்தியா

89. இராசதுரை பிரசன்னா

90. ஆனந்தராசா சுகிர்தா

91. ஜெயக்கொடி கார்த்திகா

92. புவியரசன் நிரூஜா

93. மகேசலிங்கம் செந்துஜா

94. தர்மராசா தயாரூபினி

95. குமாரவேல் மாலினி

96. பாலசிங்கம் சுமித்திரா

97. தமிழ்முத்து தயாளினி

98. நந்தகுமார் சுபா

99. கைலாயப்பிள்ளை கலையரசி

100. சிறி கஸ்த்தூரி

101. தர்மபாலன் தர்சிகா

102. சூரியகுமார் சிந்துஜா

103. சாயினி

104. ராஜேஸ்வரன் சிறிவித்தியா

105. ரவிச்சந்திரன் சாயித்தியா


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025