கட்டுநாயக்க திரும்பிய வெளிநாட்டவருக்கு ஏற்பட்டநிலை : கண்ணீருடன் நிற்கும் துயரம்
இலங்கையை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புகையிரதத்தில் பயணித்த செர்பிய பிரஜையின் கடவுச்சீட்டு, விமான சீட்டு மற்றும் மடிக்கணனி அடங்கிய சூட்கேஸை திருடிய நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் பேரில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டாமிர் ஹாட்ஸிக் என்ற செர்பிய நபர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விரைவு ரயிலில் பயணித்தவேளை சம்பவம்
செர்பிய பிரஜை மாத்தறை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்து பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி செல்லும் விரைவு ரயிலில் பயணித்துள்ளதாகவும் தனது பெருட்களை அடங்கிய சூட்கேஸை எடுத்துக் கொண்டு ஒருவர் ஓடியதாகவும் களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பாஸ்போர்ட், விமான டிக்கெட், ட்ரோன் கமரா, மடிக்கணனி மற்றும் 200 யூரோக்கள் சூட்கேசில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையில் முறைப்பாடு
திருட்டுச் சம்பவத்தின் பின்னர் பாணந்துறை புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டதால், பாணந்துறை புகையிரத நிலையத்தில் இருந்து இறங்கிய செர்பிய நபர் சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு காவல்துறைக்கு தகவல் வழங்கிய நிலையில் களுத்துறை தெற்கு காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதாக காவ்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது முக்கிய ஆவணங்கள் தொலைந்ததால் அவர் கண்ணீருடன் காவல் நிலையம் அருகில் நின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |