கிளிநொச்சியில் ஒரு வாரத்தில் பல இடங்களில் கொள்ளை: தொடரும் விசாரணை
கிளிநொச்சியில் (Kilinochchi) ஒரு வாரத்தில் பல இடங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி காவல் பிரிவுக்கு உற்பட்ட பகுதிகளான ஏ9 வீதியில் உள்ள இடங்களிலில் இந்த சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, உதயநகர் மற்றும் விவேகானந்தநகர் ஆகிய இடங்களிலும் இந்த கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணொளிகள்
இதில் ஏ9 வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் கடையின் முன் பகுதி கதவை உடைத்து சுமார் 15 லட்சம் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.
அதன் சிசிரிவியின் (CCTV) காணொளிகள் ஊடாக திருடர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி தருவாயில் மகிந்தவுக்கு அழைப்பு விடுத்த லசந்த: மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை
முறைப்பாடு
இதேபோன்று உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் மூன்று திருடர்கள் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்கு செல்லும் நிலையில் சிசிரிவியின் காணொளிகள் ஊடாக சிக்கியுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேல விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
