இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாய நிலை! நாடாளுமன்றத்தில் வைத்து கடுமையான எச்சரிக்கை
இலங்கையில் தற்போது பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டில் முற்றாக இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றது.
தற்போது பற்றாக்குறையாக உள்ள இந்த அத்தியாவசியப் பொருள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது இலங்கை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதும் ஆழமானதுமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.