வரலாற்றில் முதல் தடவை : பாரியளவு போதைப்பொருளுடன் ஏழு கடற்றொழிலாளர்கள் ஆழ்கடலில் கைது
Sri Lanka Navy
Drugs
By Sumithiran
நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பிடிமானமான சுமார் 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை, ஏழு கடற்றொழிலாளர்களுடன், ஆழ்கடலில் கடற்படை கைப்பற்றியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
கப்பலில் 51 உரப் பைகள், 700 கிலோகிராம் எடையுள்ள 500 ஐஸ் பொதிகள் மற்றும் 178 ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
போதைப்பொருள் கப்பல்
இந்த போதைப்பொருள் கப்பல் தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான கொஸ்கொட சுஜிக்கு சொந்தமானது என்று கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்