வடக்கு கிழக்கில் திகிலூட்டும் தற்கொலைத் தரவுகள் - கள நிலவரம்
சமூக மட்டத்தில் மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கூடிய சிறுவர்களுக்கெதிரான சீரழிவுகளை அதிகரிக்கச்செய்யும் நடவடிக்கைகளும், திகிலூட்டும் தற்கொலைகளும் மிக அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்ககூடியதாக காணப்படுகிறது.
இலாப நோக்கில் நகர்த்தப்படும் சில செயற்பாடுகளால் மிகமோசமான விளைவுகளை உண்டுபண்ணுவதோடு சிறுவர்களின் மீதான சமூக சீரழிவுக்கான காரணங்களாகி வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இவ்வாறான நடத்தைசார் பிரச்சினைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் ஆரோக்கியமற்ற ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, பாலியல் துஷ்பிரயோக ஆவணங்கள் தயாரிக்கும் முகவர்களாக சிறுவர்களே மாற்றப்படுகின்ற நிலைமை அதிகரித்து சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துவதற்கான சார்புகளுக்கான ஆவணங்களின் அளவு கடந்த 2019 ஆம் ஆண்டைவிட 2023 ம் ஆண்டு 1058% ஆக அதிகரித்திருப்பதாக ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் பங்குகொண்ட உளவளத்துணை சார் சமமூக செயற்பாட்டாளர் விவேதா ஜனுஷாந்த் ஓர் அதிர்ச்சிகரமான ஆய்வுத்தரவினை வழங்கியிருக்கிறார்.
குறிப்பாக நீண்டகால போரின் பிடியில் சிக்கி சீரழிந்துபோன வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் ஒப்பீடுகளில் முன்னிலை வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகுதி - 1
பகுதி - 2
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்