வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி பாலியல் துஷ்பிரயோகம்: உணவக உரிமையாளர் உட்பட மூவர் கைது!
பெந்தோட்டையில் 26 வயதான மியன்மார் நாட்டு யுவதியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் உணவகம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட மூவரை சந்தேகத்தின் பேரில் பெந்தோட்டை காவல்துறையினர் இன்று (16) கைது செய்துள்ளனர்.
குறித்த யுவதி தனது நண்பருடன் சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் உள்ள உணவகத்துக்கு உணவருந்தச் சென்றதாகவும், அங்கு அவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் போதைப் பொருட்களை கலந்து கொடுத்து அவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்கள் பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
