இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட 15 வயதுச் சிறுமியின் வழக்கு தொடர்பில் வெளியான புதிய தகவல்
கல்கிஸ்ஸையில் 15 வயதுச் சிறுமி இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த வழக்கு விசாரணைகள் மந்த கதியில் செல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இந்த கைதுகள் குறித்து பொலிஸார் இன்று புதிய தகவல் வெளியிட்டுள்ளனர்.
களுத்துறையைச் சேர்ந்த 42 வயதான கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் மொரட்டுவையில் ஒரு கைத்தொலைபேசி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் ஜூன் 7 ஆம் திகதி 35 வயது நபர் கைது செய்யப்பட்டதிலிருந்து, நேற்று (ஆகஸ்ட் 2) வரை 43 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் தொடர்பிலும், பலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.