தாயின் முன்னிலையில் 26 வயது யுவதியை வன்கொடுமை செய்த காவல்துறையினர்..!
தாயின் முன்னிலையில் 26 வயதான மாற்றுத்திறனாளியான மகளை நிர்வாணமாக்கி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமன்றி கடுமையாகத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் காவல்துறை உத்தியோகஸ்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்வதற்கு தேடப்பட்டுக்கொண்டிருக்கும் காவல்துறை உத்தியோகஸ்தர், வாழைத்தோட்ட காவல்துறையில் இணைக்கப்பட்டு, கொழும்பு பிரதிப் காவல்துறை மா அதிபரின் காரியாலயத்தில் கடமையாற்றுகின்றார்.
இந்த காவல்துறை உத்தியோகஸ்தரின் நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்துக்கொள்வதற்காக, இந்த யுவதியுடன் அவருடைய தாய், இரண்டு வருடங்களாக அந்த காவல்துறை உத்தியோகஸ்தரின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
கடுமையாக தாக்கிய காவல்துறை உத்தியோகஸ்தர்
இந்நிலையில், அந்த காவல்துறை உத்தியோகஸ்தருக்கு சொந்தமான 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில், தாயையும் மகளையும் அறையொன்றுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குவைத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்த யுவதியிடம் காவல்துறை உத்தியோகஸ்தர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அக்கோரிக்கையை அந்த யுவதி நிராகரித்துள்ளார் என யுவதியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், அந்த யுவதியை கடுமையாக தாக்கிய காவல்துறை உத்தியோகஸ்தர், தாயின் முன்னிலையில் யுவதியை நிர்வாணமாக்கி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.
இதுதொடர்பில், கொஸ்கம காவல்துறை நிலையத்தில், வௌ்ளிக்கிழமை (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த யுவதி முறைப்பாடு செய்வதற்கு முன்னர், கொஸ்கம காவல்துறை நிலையத்துக்குச் சென்ற காவல்துறை உத்தியோகஸ்ர், தன்னுடைய 10 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தொடர்பில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாற்றுத்திறனாளியான 26 வயதான யுவதியை, வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறை உத்தியோகஸ்தர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
