வன்புணர்வை ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்யா - உக்ரைன் முதல் பெண்மணி பகீர்..!
ரஷ்யா, உக்ரைனில் பலாத்காரத்தை போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக உக்ரைன் முதல் பெண்மணி ஒருவர் குற்றம்சாட்டினார்.
உக்ரைனில் ஒரு வருடத்தைக் கடந்து நடந்துவரும் போரில், ரஷ்ய துருப்புக்கள் செய்த 171 பாலியல் வன்புனர்வு வழக்குகளை அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரித்து வருவதாக உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா (Olena Zelenska) நேற்று(4) தெரிவித்திருந்தார்.
பாலியல் வன்முறை மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய குழு விவாதத்தில் உரையாற்றிய ஒலேனா ஜெலென்ஸ்கா, மேற்கூறிய புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட அதிகாரப்பூர்வமானவை என்றும், ஆனால், இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் வெளிப்படையாக சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
171 பாலியல் வன்கொடுமை
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்னவென்று தெரியாத அவலநிலை காணப்படுகிறது.
விசாரிக்கப்பட்டுவரும் இந்த 171 பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களில் 39 ஆண்கள், 12 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் வலிமையுடன் வெளியே சொன்னதால் மட்டுமே இவர்களைப் பற்றி தெரிவந்தது.
தீர்ப்புகள்
ரஷ்யாவின் இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் பிற போர்க்குற்றங்களுக்கான தீர்ப்புகள் ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.
இதன் மூலம், உலகில் உள்ள எந்தவொரு ஆக்கிரமிப்பாளரும், கூட்டுப் பலாத்காரம் செய்பவர்களும் இதுபோன்ற விடயங்கள் தண்டிக்கப்படாமல் போகாது என்பதை அறிவார்கள்.
மேலும், ரஷ்யா உக்ரைனில் பாலியல் வன்கொடுமையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. கடந்த ஆண்டு நவம்பரில், ரஷ்ய இராணுவ வீரர்களின் மனைவிகள் உக்ரேனிய பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஊக்குவித்துள்ளனர்.” அவர் கூறினார்.
