கடமையில் இருந்த பெண் ஊழியர் மீது பாலியல் வன்புணர்வு - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்
முல்லைத்தீவு பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த குடும்ப பெண்ணை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவமானது நேற்றையதினம் (15) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியர் ஒருவர் காட்டிற்குள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் குறித்த பெண்ணை காட்டிற்குள் கடத்திசென்று பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து இருவரின் பிடியில் இருந்து தப்பி சென்ற பெண் அங்கு பணியாற்றும் ஏனையவர்களை அழைத்துள்ளார்.
இந்நிலையில் காட்டுப்பகுதியில் பெண்ணினை கடத்திய இருவரும் தப்பி சென்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
