சீசெல்ஸ் நாட்டில் பதற்றம்: அவசர நிலை பிரகடனம்
சீசெல்ஸ் நாட்டிலுள்ள மாஹே தீவில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு மற்றும் வெள்ளம் காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்துமாறு சீசெல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன் உத்தரவிட்டுள்ளார்.
சீசெல்ஸ் நாட்டிலுள்ள தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக வணிக கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவசர நிலை பிரகடனம்
மேலும், அத்தியாவசியத் தொழிலாளர்களைத் தவிர ஏனையோரை வீட்டிலேயே இருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதோடு அவசர தேவைகளை தவிர வைத்தியசாலைகளும் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய வெடிப்பு சம்பவத்தினால், மக்கள் பலர் காயமடைந்துள்ளதோடு அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கட்டுமான தொழில் நிறுவனம் ஒன்றில் வெடிபொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் வெடித்ததிலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
மாஹே தீவில் வெள்ளம்
இந்நிலையில் மாஹே தீவில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
மாஹே தீவு மக்களை மறு அறிவித்தல் வரும் வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், 3 பேர் பலியாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த இரு சம்பவங்களையும் நாட்டிற்கு 'பேரழிவு' என்றுஅந்நாட்டு அதிபர் ராம்கலவன், கூறியுள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்கள், உதவி செய்து ஒத்துழைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Untold destruction of lives and property,let's take a minute to pray for the good people of Seychelles, they're presently going through a lot of natural and man made disasters! pic.twitter.com/iykc9Y36e5
— Antony (@sesellove) December 7, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |