இந்த அரசாங்கம் விரைவில் ஆட்சியில் இருந்து வெளியேறும்..! சாணக்கியன் இடித்துரைப்பு

Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam Government Of Sri Lanka Sri Lankan political crisis
By Kanna Oct 05, 2022 10:20 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

பொருத்தமான கொள்கைகளை வகுக்கவில்லை

இந்த அரசாங்கம் விரைவில் ஆட்சியில் இருந்து வெளியேறும்..! சாணக்கியன் இடித்துரைப்பு | Shanakiyan Speech In Parliament Today

தொடர்ந்து கருத்துரைத்த அவர், “ பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண அரசாங்கம் பொருத்தமான கொள்கைகளை வகுக்கவில்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சட்டத்தை திருத்தம் செய்வதால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

கடந்த ஓரிரு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஏற்றுமதி அதிகரிக்கப்படவில்லை, மாறாக ஏற்றுமதி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் அந்நிய செலாவணி மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் வீழ்ச்சியடைந்தது. சட்ட திருத்தங்கள் செய்வதால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது, கொள்கை ரீதியில் நடைமுறைக்கு பொறுத்தமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதை தவிர்த்து விட்டு அரசாங்கம் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர் யுவதிகளை பின்தொடர்ந்து செல்கிறது.

நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கேசன் துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.

இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு கூட இன்று இல்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டம்

இந்த அரசாங்கம் விரைவில் ஆட்சியில் இருந்து வெளியேறும்..! சாணக்கியன் இடித்துரைப்பு | Shanakiyan Speech In Parliament Today

மேலும், வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டத்தின் ஈடுபட்ட பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். 47 நாட்களாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செய்ய தவறு என்ன என்பதை நாடாளுமன்றில் வெளிப்படுத்த வேண்டும்.

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது? அந்த இளைஞர்கள் செய்த தவறு என்ன? பல தமிழ் இளைஞர்கள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது அவர்களின் வழக்கு விசாரணைகளையேனும் துரிதப்படுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முகநூலில் கருத்து வெளியிட்டார்கள் என்றுக்கூட சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இளம் தலைமுறையினரை கைது செய்ய என்ன காரணம்? இவர்கள் செய்த பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ன? இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நிச்சயமாக விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்", எனக் குறிப்பிட்டார்.


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011