பிரபல நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது

Sri Lanka Police Batticaloa Arrest
By Rusath Jul 11, 2026 11:53 AM GMT
Report

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை களவாடிய பெண்ணை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை(10.07.2026) கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சூட்சுமமாக களவாடப்பட்ட தங்க காப்பு

களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் கடந்த 2026.06.04 அன்று தங்க நகை கொள்வனவு செய்வதற்கு குறித்த பெண் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்க காப்பு ஒன்றை மிகவும் சூட்சுமமான முறையில் அப்பெண் களவாடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த நகைக் கடை உரிமையாளர் களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

பிரபல நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது | Woman Arrested For Stealing Gold Jewelry

இந்நிலையில் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் முன்னால் வைத்து குறித்த பெண்ணை  கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டவரை மிரட்டி 3 மில்லியன் ரூபா கப்பம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்

வெளிநாட்டவரை மிரட்டி 3 மில்லியன் ரூபா கப்பம்! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்

காவல்துறையின் அறிவிப்பு

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து தங்க காப்பு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணையும், தங்க நகையையும் நீதிமன்றில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

பிரபல நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது | Woman Arrested For Stealing Gold Jewelry

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 45 வயதுடை அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

அறிமுகமில்லாதவர்களிடம் பழகும்போதும், தூரப் பிரதேசங்களிலிருந்து வரும் நபர்களிடம் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் வியாபாரங்களில் ஈடுபடும்போதும், வியாபாரிகளும், இப்பகுதி பொதுமக்களும், மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு களுவாஞ்சிக்குடி காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்ன வேண்டுகோள் விடுக்கின்றார்.  

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026