முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் திடீர் மரணம்!
heart attack
Shane Warne
passes away
Australian cricketer
By Thavathevan
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வீரர் ஷேன் வோர்ன் (வயது 52) இன்று காலமானார்.
தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷேன் வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708- விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷேன் வோர்ன், 2007- ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
ஷேன் வோர்னின் திடீர் மரணம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி