மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வெள்ளைவான் கடத்தல்- சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

mahinda gotabhaya shani abeysekara sugath mendis
By Kalaimathy Jun 16, 2021 06:17 AM GMT
Report

வெள்ளை வான் கடத்தல் உட்பட கடந்தகால குற்றச் செயல்கள் பற்றி துரித விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

ஸ்ரீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு இன்றைய தினம் பிணை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தாக்கல் செய்த பிணை கோரிக்கை தொடர்பான மனு மீதான விசாரணை ஸ்ரீலங்கா மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷசங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 25000 ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபர்கள் இருவருக்கும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாத வகையில் நீதிமன்றத்தினால் தற்காலிகத் தடையுத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சந்தேக நபர்கள் தங்கியிருக்கின்ற இல்லங்களின் முகவரிகள் மாற்றப்பட்டால் அதுகுறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு கொழும்பு - பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் குறித்து போலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் கைதுசெய்யப்பட்டு, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்காவின் தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்த போது தற்போதைய அரச தலைவரான கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமைபுரிந்த காலகட்டத்தில் வெள்ளை வானில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் இந்த இருவருமே துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைகளுக்கு மத்தியில் கடந்த நல்லாட்சியின் காலத்தில் ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்த முன்னாள் தளபதி, ஊடகப் பேச்சாளர் என 16 சந்தேக நபர்கள் வெள்ளை வான் கடத்தல் வழக்கில் கைதாகியிருந்தனர். இவர்களது விசாரணைகளில் ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி தரும் பரபரப்பு தகவல்கள் வெளியாகிவந்தன.

எனினும் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வெள்ளை வான் விசாரணைகளில் பல தகவல்களை வெளிகொணர நடவடிக்கை எடுத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் மற்றுமொரு அதிகாரியான கந்தப்பா நிஸாந்த டி சில்வா சுவிட்ஸர்லாந்து நாட்டிற்குத் தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025