திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் உள்ள குறைபாடு: தமிழ் எம்பி வெளியிட்டுள்ள தகவல்
திருகோணமலை (Trincomalee) மாவட்ட வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் ஒரு பகுதி மாத்திரம் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (Kathiravelu Shanmugam Kugathasan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06) தனது முதலாவது கன்னியுரையின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரிவில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால், நோயாளிகளை நிர்வகிக்க போதிய இடவசதி இல்லாமையால் இக்கட்டடத்தை கட்டி முடிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை
குறி்ப்பாக, திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரிவு ஒன்று இல்லாததால் இம் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாதுவதுடன் இவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காகச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதன் விளைவாக இம்மக்கள் பணச் செலவு, போக்குவத்து, நேரம், மொழி, தங்குமிட வசதி முதலிய சிக்கல்கள்களை எதிர்நோக்குவதால் இவற்றை தீர்ப்பதற்கு புற்றுநோய் பிரிவு ஒன்றை இம்மாவட்ட மருத்துவமனையில் நிறுவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |