அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு ஏவுகணை தாக்குதல்...! ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல்களை ஏவுகணைகள் மூலம் இலக்கு வைத்துத் தாக்கும் தொழில்நுட்ப மற்றும் இராணுவத் திறன் ஈரானிடம் முழுமையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) துணைத் தளபதி மேஜர் ஜெனரல் மொஸ்தஃபா இஸாதி (Major-General Mostafa Izadi) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எண்ணிக்கை அடிப்படை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எங்களது ஏவுகணைத் திறன்கள் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமல்லாமல் அதிநவீன தொழில்நுட்ப ரீதியாகவும் மிக அதிகளவில் வளர்ச்சியடைந்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் மத்திய கிழக்கு மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானந்தாங்கி போர்க்கப்பல்களைத் (US Naval Vessels) துல்லியமாகத் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் ஈரானிய இராணுவத்திடம் தயார் நிலையில் உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளுக்கும் உடனடியாகப் பதில் தாக்குதல் நடத்த ஈரானிய புரட்சிகர காவல் படை முழுப் போர்த் தயார்நிலையுடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |