மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்ட சஷீந்திர ராஜபக்ச
Shasheendra Rajapaksa
Sri Lanka Magistrate Court
By Sumithiran
மகாவலி நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகத்தை அரகலய போராட்டகாரர்கள் எரித்து அழித்தனர் எனத் தெரிவித்து இழப்பீடாக ரூ. 8,850,000/- ஐ சட்டவிரோதமாகப் பெற்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச சமீபத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்சவை(Shasheendra Rajapaksa) எதிர்வரும் (29) ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதவான் பிறப்பித்த உத்தரவு
இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்