சவேந்திர சில்வா மற்றும் அவரது மனைவிக்கு சிறப்பு ஜெட் விமானம்! இந்தியா அளித்த விளக்கம் (படங்கள்)
சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் இந்தியாவின் சிறப்பு ஜெட் விமானமொன்றை பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விளக்கத்தை இந்தியா வழங்கியுள்ளது.
இது தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ள நிலையிலேயே, இந்திய விமானப்படை இந்த விளக்கத்தை வழங்கியுள்ளது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் தேராதூனிலுள்ள இந்திய இராணுவ கல்வி நிறுவகத்தில் சித்தியடைந்து வெளியேறும் கெடட் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வில் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் பிரதானியான சவேந்திர சில்வா அண்மையில் பங்கேற்றிருந்தார்.
இந்திய விமானப்படை
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் டெல்லியில் இருந்து இந்தியாவின் டெஹ்ராடூனுக்கு சிறப்பு பிரத்தியேக ஜெட் விமானமொன்றின் மூலம் பயணித்திருந்தார்.
குறித்த பயணத்துக்கான வசதிகளை இந்திய விமானப்படை செய்து கொடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரமுகர்களுக்கான நிலையான நெறிமுறைகளுக்கமைய சவேந்திர சில்வாவுக்கு இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா விமானப்படை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |