அனைத்து கொரோனா மரணங்களுக்கும் சவேந்திரசில்வா உள்ளிட்ட குழுவே பொறுப்பு- ரணில் குற்றச்சாட்டு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து கொரோனா மரணங்களுக்கும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தலைமையிலான கொரோனா ஒழிப்பு செயலணி பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் இந்த செயலணி தோல்வியுற்றுள்ளதால் அரசாங்கம் உடனடியாக இதனை கலைத்துவிட்டு சட்டரீதியான குழுக்களுக்கு கொரோனா ஒழிப்பு பொறுப்பினை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனியும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொ ரோனா தொற்றால் இந்தியா கடந்த மாதங்களில் எதிர்க் கொண்ட நிலையினை நாமும் எதிர்கொள்ள நேரிடும்.
எனவே இரா ணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்காமல் சுகாதார தரப் பினருக்கு முன்னுரிமை வழங்கி துரிதமாகச் செயற்பட வேண்டும் எனவும் ரணில் தெரிவித்துள்ளார். தேவைக்கேற்ப சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
நாட் டிலுள்ள அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு விசேட வைத் திய நிபுணர்கள் அடங்கிய அனர்த்த முகாமைத்துவ சபை உரு வாக்கப்படுவது கட்டாயமாகும்.அமைச்சரவைக்கு அதிகாரம் கொடுத்து நாடாளுமன்றுக்கு பொறுப்புக் கொடுத்து கொரோனா ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.