புதிய ராடர் கட்டமைப்புடன் கொழும்பிற்குள் நுழைந்த சீனக் கப்பல்! பதற்றத்தில் இந்தியா
இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுத்து தன்னை காப்பாற்றுவதற்குரிய முயற்சியை இந்தியா மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் பெயரில்(பி.என். எஸ் திப்பு சுல்தான்) நவீன சீனக் கப்பல் ஒன்றே இலங்கைக்கு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு சீனாவின் யுவாங் வாங் - 5 கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததது.
ஆனால் இப்போது இன்னுமொரு நாட்டின் பெயரில் சீனாவின் கப்பல் கொழும்பிற்குள் நுழைந்திருக்கிறது.
அதற்கு இணையாகவே இந்தியா தனது கப்பலை (ஐ.என்.எஸ். வாகீர் நீர்மூழ்கிக் கப்பல்) கொழும்பிற்கு அனுப்பியுள்ளது. சர்வதேச யோகா தினத்தில் கடற்படைக் கப்பலை அனுப்பிய இந்தியாவின் நகர்வு சிந்தனைக்குரியதாகவே இருக்கிறது.
தனது பாதுகாப்பை தக்க வைப்பதற்கு இலங்கை அரசின் மீது அழுத்தங்களை கொடுத்து தன்னை காப்பாற்றுவதற்குரிய முயற்சியை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம் இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தத்தை புரிந்துகொள்ள முடியும் என அவர் கூறுகிறார்.
