4000 அதிசொகுசு கார்களுடன் கடலில் மூழ்கியது கப்பல் (படங்கள்)
4000 அதிசொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக போர்த்துக்கீச கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனிலிருந்து அமெரிக்கா நோக்கி சென்ற கப்பலே, அட்லாண்டிக் கடலில் செவ்வாய்க்கிழமையன்று மூழ்கியுள்ளது.
1000 போர்ஸ் கார்கள், 200 பென்ட்லி கார்கள் உள்ளடங்கலாக 4000 கார்கள் இவ்வாறு கப்பலுடன் கடலில் மூழ்கியுள்ளன. எனினும், இந்த கப்பலில் இருந்த வாகனங்களின் எண்ணிக்கை சரியாக தெரியாது என கூறப்படுகின்றது.
ஜேர்மன் எடிமன்ட் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரொட் அயிலன்ட் துறைமுகத்தை நோக்கி பயணித்த குறித்த கப்பலில், கடந்த 16ம் திகதி தீ பரவியுள்ளது. இந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், நேற்றைய தினம் கப்பல் கடலில் மூழ்கியுள்ளதாக போர்த்துக்கீச கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பட்டரி காரணமாக இந்த தீ பரவியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுகின்றனர். அத்துடன், கப்பலில் சுமார் 2000 மெற்றிக் தொன் எரிபொருள் காணப்பட்டமையினால், கடலுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Navio mercante "Felicity Ace" afunda fora da Zona Económica e Exclusiva Portuguesa
— Marinha (@MarinhaPT) March 1, 2022
Hoje, durante o reboque, que se tinha iniciado no dia 24 de fevereiro, o navio "Felicity Ace" perdeu estabilidade tendo vindo a afundar-se.
Notícia completa em https://t.co/dxKBKcyN2o pic.twitter.com/yZygL537uk
