தமிழர் தாயகத்தை இணைத்து தனி மாகாணம் : இந்தியாவிடம் விடுத்த கோரிக்கையால் சர்ச்சை
தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை இணைத்து இந்து மக்களுக்கு தனி மாகாணத்தை உருவாக்க வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையிலான சிவசேனை அமைப்பு இந்தியாவிடம் வேண்டுகொள் விடுத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிவசேனை இதனைத் தெரிவித்துள்ளது.
தமது நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவானது அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய துணை உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளதாக சிவசேனை அறிவித்துள்ளது.
அந்த நான்கு கோரிக்கைகளாவன,
1) 1987 இந்தியா இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை இணைத்து இந்து மக்களுக்கு தனி மாகாணத்தை உருவாக்க வேண்டும்.
2)தமிழகத்தில் உள்ள பாரதிய வித்தியா பவன் அழைப்பு யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் கலைகள் இசைகள் என்பவற்றை கற்பிக்க வேண்டும்
3)காங்கேசன்துறை - நாகப்பட்டினம் துறைமுகங்களில் இலங்கை மற்றும் இந்திய ரூபாயை மாற்ற வங்கி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
4)மதமாற்றம் செய்பவர்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்குள்ளும் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள்ளும் அனுமதிக்க கூடாது.