மாவீரர் மற்றும் மக்களின் தியாகங்களை மறந்து தறிகெட்டு திரியும் இளம் சமுகம் : முன்னாள் எம்.பி வேதனை
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழ் தேசிய அரசியலில் ஒரு தேக்க நிலை இருப்பதை எவரும் மறுக்க முடியாது.இது மிகவும் துரதிஷ்டவசமானது.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மண்ணில் ஆகுதியான நிலையில் தற்போது இந்த போராட்டத்தை மறந்து இளம் சந்ததி வேறுதிசையில் செல்வதற்கு நாம் அனைவருமே பொறுப்பு.
இதுவரை நடைபெற்ற போராட்டங்களின் விளைவுகளை வைத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.அதற்கு சர்வதேச அரங்கில் முயற்சி செய்யவேண்டும்.
இதற்கு புலம்பெயர் உறவுகளும் தாயகத்தில் உள்ளவர்களும் ஒரே கொள்கையை நோக்கி நகரவேண்டும் என்பதே எனது கருத்து.
இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பருத்தித்துறை நகரபிதாவுமான எம்.கே சிவாஜிலிங்கம்.
ஐபிசி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்கு தற்போதை அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்..