சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி வல்வெட்டித்துறை நகரம் முழுவதும் கடையடைப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகரம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் நீண்டகாலமாகப் பயணித்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தேசிய அபிலாஷைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த சிவாஜிலிங்கத்தின் மறைவு, வல்வெட்டித்துறை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகப் பார்க்கப்படுகின்றது.
ஈடுசெய்ய முடியாத இழப்பு
இதனை முன்னிட்டு, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக வல்வெட்டித்துறை நகரப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, நகரம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் சிவாஜிலிங்கத்திற்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

