இஸ்ரேலால் விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீனிய பத்திரிகையாளரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்
இஸ்ரேலிய தடுப்புக்காவலில் ஆறு மாதங்களுக்குப் பிறகு பாலஸ்தீனிய பத்திரிகையாளர் முஜாஹித் பனி முஃப்லேவின் அதிர்ச்சியளிக்கும் புகைப்படம், இஸ்ரேலிய சிறைகளில் நிலவும் சோகமான நிலைமைகளைக் காட்டுகிறது என்று கைதிகள் நலன்சார் குழு ஒன்று அறிக்கை வெளியிட்டது.
இஸ்ரேலிய சிறைகள், பாலஸ்தீனிய கைதிகளை மெதுவாகவும் நேரடியாகவும் கொல்வதற்கான ஒரு கருவியாக மாறிவிட்டன, என்று பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தனக்கு ஏற்பட்ட நோய்க்கான நீண்ட சிகிச்சைக்கு பிறகு, பனி முஃப்லே புதன்கிழமை அன்று தனது புகைப்படத்தை வெளியிட்டார்.
தடுப்புக்காவலில் அறுவை சிகிச்சை
இஸ்ரேலிய தடுப்புக்காவலில் இருந்தபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளின் விளைவாக, அவரது மண்டையோட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்ததை அந்தப் புகைப்படம் காட்டியுள்ளது.

பாலஸ்தீனிய பத்திரிகையாளர் கணிசமான அளவு உடல் எடையை இழந்திருந்தார் என்றும், அவர் வெளிறிப்போய், அடையாளம் காண முடியாத அளவில் காணப்பட்டார் என அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
பானி முஃப்லேவின் நிலை ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக இஸ்ரேலிய சிறைகளுக்குள் சித்திரவதை, பட்டினி, சிகிச்சை மறுப்பு, உடல் மற்றும் மனரீதியான தாக்குதல்கள், அத்துடன் தொடர்ச்சியான உளவியல் பயங்கரவாதம் உள்ளிட்ட திட்டமிட்ட மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களை இது சுட்டிக்காட்டுகிறது, என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடுமையான உடல்நல பிரச்சினை
கடுமையான உடல்நலம் மற்றும் மனநலப் பிரச்சினைகளில் இருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை, கைதிகள் விவகாரக் குழுக்கள் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்களின் குடும்பத்தினர் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், வேறு பல வழக்குகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன என அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் நிர்வாகத் தடுப்புக் காவல் கொள்கையின் கீழ், நப்லஸ் நகரின் பெய்டா பகுதியைச் சேர்ந்த பானி முஃப்லேவை, இஸ்ரேலியப் படைகள் 2025 ஜூன் மாதம் எந்தக் குற்றச்சாட்டும் இன்றித் தடுத்து வைத்து, 2026 ஜனவரியில் அவரை விடுவித்ததாக அந்த உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்