ஆவா குழு தொடர்பில் வெளியான அதிர்ச்சியான தகவல்
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக அண்மையில் கொழும்பில் மறைந்திருந்தவேளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வலான பிரதேச வீடொன்றில் தங்கியிருந்தபோது மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
ஆவா குழுவின் இலச்சினை
அத்துடன் தான் அந்த குழுவில் இரண்டு வருடங்களாக அங்கத்தவராக இருப்பதாக அவர் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேவேளை, ஆவா குழுவின் இலச்சினையில் உள்ள '001' என்ற எண்ணுக்கான விளக்கம் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலச்சினையை உருவாக்கியவர்கள்
இந்த இலச்சினையை உருவாக்கியவர்கள் சன்னா மற்றும் தேவா என்ற இருவரே எனவும் அவர்கள் இப்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள் எனவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.
தான் கொழும்பிற்கு வந்தது அந்த அமைப்பில் இருந்து விலகி எனவும் அவர்கள் தமது வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராக அளவெட்டி கனி என்பவர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |