பாடசாலை மாணவர் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டில் பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசி, மடிக் கணினி போன்ற மின்னணு சாதனங்களில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக செலவிடுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
காலி (Galle) மாவட்டத்தில் தரம் 7 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக காலி மாவட்ட சமூக நிபுணர் வைத்தியர் அமில சந்திரசிறி (Amila Chandrasiri) தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளையும் மறந்து தொலைபேசியின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றனர்.
கல்வி சாரா நடவடிக்கை
தங்களைச் சுற்றி நடக்கும் எந்த சிந்தனையும் அற்றவர்களாகக் காணப்படுவதுடன், கற்றலில் ஈடுபாடு காட்டுவதில்லை மாறாக தொலைபேசி விளையாட்டுக்கள், முகபுத்தகங்களின் பாவனை என்பவற்றில் நேரத்தை வீணாக செலவிடுகின்றனர்.
தொலைபேசி விளையாட்டு மீதான இவர்களின் ஈடுபாடு உணவு, உறக்கம் என்பவற்றை மறக்கடிக்கும் அளவில் காணப்படுகின்றது.
சில நேரங்களில் பாடசாலைக்குக் கூட செல்லாமல் தொலைபேசி விளையாட்டுக்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர் என குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |