மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் துப்பாக்கிச்சூடு!
Sri Lanka Police
Colombo
Shooting
Sri Lankan Peoples
By Kiruththikan
பேலியகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெத்தியாகொட பகுதியில் நேற்றைய தினம் (26) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது
பெத்தியாகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சந்தேகநபர்கள் விற்பனை நிலைய உரிமையாளரை குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் எவருக்கும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு குறித்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பேலியகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி