கிளப் வசந்த கொலை: அதிரடியாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள்
கிளப் வசந்த (Club Wasantha) என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரென அடையாளம் காணப்பட்ட 31 வயதுடைய பதி ஆரம்பகே அஜித் ரோஹன என்பவர் தெஹிவளை (Dehiwala) கௌடானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு
அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கதிர்காமத்திற்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் 29 வயதான தாருகா வருண இந்திக்க டி சில்வாவும் அதுருகிரியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது அதிகாரிகள் ரி-56 ரக துப்பாக்கி, 120 துப்பாக்கி குண்டுகள் மற்றும் 9mm பிஸ்டல் துப்பாக்கி குண்டுளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        