அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிசூடு: மூவர் பலி
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு பெண்கள் உட்பட மூவர் பலி
இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட மூன்று பேர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். மற்றொரு ஆண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வெளியாட்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்றும், குடியிருப்பாளர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |