மன்னாரில் துப்பாக்கிச் சூடு - இருவர் உயிரிழப்பு

Sri Lanka Police Mannar Sri Lanka Police Investigation
By Sathangani Aug 24, 2023 07:36 AM GMT
Report

மன்னார், பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று(24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று  காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள்

மன்னாரில் துப்பாக்கிச் சூடு - இருவர் உயிரிழப்பு | Shooting In Mannar 2 Death

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது- 43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது- 56)  என தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் இன்று (24)  காலை மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்ற போதே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு,  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களின் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழிக்கு பழி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் இது  தொடர்பாக அடம்பன்  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்