தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்
மாத்தறை (Matara) - கபுகம (Kapugama) பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (03.08.2025) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்து வீட்டினுள் இருந்த ஒருவரை குறிவைத்து T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 48 வயதான ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் பேருந்து உரிமையாளர் மற்றும் வர்த்தகர் எனவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
