விரைவில் கைதாகும் பிக்கு! விசாரணைகள் தீவிரம்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய பிக்கு கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு அரசியல் கட்சியின் செயலாளர் பதவியை வகித்த ஒருவரை கடத்திய குற்றச்சாட்டிலேயே இந்த கைது மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவரும், முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நீண்ட விசாரணை
இந்நிலையில், கடத்தப்பட்ட நபர், சம்பவம் குறித்து முறைப்பாடளிக்க அப்போதைய ஜனாதிபதியைச் சந்தித்து திரும்பி வந்தபோது கடத்தல் நடந்ததாக பாதுகாப்புப் படையினரிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதன்படி, இதைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பந்தப்பட்ட பிக்கு மற்றும் பலர் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்