நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு...! ஒருவர் படுகாயம்
Sri Lanka
Sri Lankan Peoples
Department of Meteorology
By Shalini Balachandran
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்கிசை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |