கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு : துப்பாக்கிதாரிக்கு நேர்ந்த கதி
கட்டுநாயக்க (Katunayake) பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடு ஒன்றிற்குள் நுழைந்து T-56 துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த சம்பவத்தின்போது, துப்பாக்கி செயலிழந்ததால் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மற்றவர் வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர் தடுப்புச் சுவரில் ஏறி தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து இரு கால்களும் முறிந்து படுகாயமடைந்துள்ளார்.
அந்த நேரத்தில், அவர் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும், இதனால் பிரதேசவாசிகள் அங்கு கூடியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில், தற்போது, துப்பாக்கிதாரி நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
