தென்னிலங்கையில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
Kalutara
Sri Lanka Police Investigation
By Dharu
மத்துகம, நேபொட பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (11) மாலை வந்த குழுவொன்றினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்