30,000 காவல்துறை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை : வெளியான அறிவிப்பு
நாட்டில் சுமார் 30,000 காவல்துறை அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasooriya) தெரிவித்துள்ளார்.
காவல்துறை மா அதிபர் நேற்று (17) கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாக காவல்நிலைய பொறுப்பதிகாரிகள் கூறுகின்றதாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
சேவையில் இணைத்துக்கொள்ள அனுமதி
அங்கு கருத்து தெரிவித்த “சுமார் 30,000 காவல்துறை அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக இந்த வருடம் 5,000 பேரை சேவையில் இணைத்துக்கொள்வதற்கும் அடுத்த வருடம் 10,000 பேரை இணைத்துக்கொள்வதற்கும் எமக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இது தொடர்பில் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்த மாத இறுதிக்குள் 400 அதிகாரிகள் ஆரம்பக்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறவுள்ளனர்.
எந்தவொரு குற்றத்தையும் மறைப்பதற்கோ, கவனத்தில் கொள்ளாமல் இருப்பதற்கோ, பதிவு செய்யாதிருக்கவோ, விசாரணை செய்யாமல் இருப்பதற்கோ அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
