மீண்டும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக மீண்டும் சந்தையில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரங்களுக்கு டொலர் வழங்கப்படாததே இதற்கு காரணம் என லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தொழிற்சாலைகள் மற்றும் பிணங்களை தகனம் செய்யும் இடங்களுக்கு மாத்திரமே லிட்ரோ நிறுவனம் தற்போது எரிவாயுவை விநியோகித்து வருகிறது.
இந்த நிலையில், விநியோகிக்க தம்மிடம் எரிவாயு இல்லை என லாஃப் எரிவாயு நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதங்களில் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதுடன் மக்கள் எரிவாயுவை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் நின்றனர் நிலைமையை காணக் கூடியதாக இருந்தது.
இலங்கையில் தற்போது பெரும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப நீண்ட நேரம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் காத்திருந்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருளை வழங்கி வருகின்றன.
