அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு - விவசாய அமைச்சர் வெளியிட்ட தகவல்
அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு
அரிசி உள்ளிட்ட உணவு வகைகளுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவ்வாறான தட்டுப்பாடு வராது என உறுதியளித்துள்ளார்.
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென்று எவரும் அச்சம் கொள்ள தேலையில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
போதியளவு அரிசி கையிருப்பில்
நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாதத்தில் மேலும் 65,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறு சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், மேலும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இதனால், அத்தியாவசிய பொருட்களை தேவைக்கு அதிகமாக சேமிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

