தமிழர்களின் சனத்தொகை போன்று வடக்கு மாகாணத்தில் குறைவடைந்த வீடுகள்
இலங்கையில் தமிழர்களின் சனத்தொகையின் அளவு குறைந்துள்ளதாக புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்தில் புதிய வீடுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 இல் மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பில் வடக்கு மாகாணத்தில் குறைந்தளவு வீடுகள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் குறைந்த வீட்டுவசதி
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மிகக் குறைந்த வீட்டுவசதி அலகுகள் பதிவாகியுள்ளன. இது எண்ணிக்கையில் 32,330 வீடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பின் தகவல்களின்படி,
இலங்கையில் மொத்த வீடுகளின் எண்ணிக்கை
இலங்கையில் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 6,030,541 ஆகும். இதில், அதிக எண்ணிக்கையிலான வீடுகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இலங்கையில் குடியிருப்பு வீடுகளின் எண்ணிக்கை 5,207,740 ஆக இருந்தது, மேலும் 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில், அந்த எண்ணிக்கை 6,030,541 ஆக அதிகரித்துள்ளது.
அதிகரித்த வீடுகள்
2012 மற்றும் 2024 க்கு இடையில், வீட்டுவசதி அலகுகள் 822,801 அதிகரித்துள்ளது, இது 15.8 ஆக சதவீதமாக பதிவாகி உள்ளது.

நாட்டில் அதிக வீட்டு அலகுகளின் எண்ணிக்கை கம்பகா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன. அந்த எண்ணிக்கை 688,635 ஆகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |