மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு -கொள்ளை இலாபம் உழைக்கும் தனியார் கடைகள்
ஹட்டனில் நிலவும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேசத்தில் உள்ள பலர், குறித்த பகுதியில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தனர்.
மேலும் அப்பகுதியிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் போது சில கடை உரிமையாளர்கள் மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றினை சுமார் 100 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிக்கையில்,தங்களிடம் உள்ள மண்ணெண்ணெய் இருப்பு விரைவில் தீர்ந்துவிடும் என்றும், மண்ணெண்ணெய் வழங்குவது ஒரு நபருக்கு ஐந்து லீற்றராக மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
